என்னுடைய இந்த பிறவி நினைவுகள் எல்லாம் தண்ணீர் மூலமாகத்தான் அடுத்த பிறவிக்கு செல்கிறதா?

New

அடுத்த பிறவிக்கு நினைவு போகிறதா இல்லையா என்பது முக்கியம் இல்லை. முதலில் இந்த பிறவியில் வாழ்வது எப்படி என்பதை நாம் கற்று கொள்வோம் . இந்த பிறவியில் நீர் எப்படி இருக்கிறது நீருக்கும் நமக்குமான தொடர்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

நீர் என்பது பொருள்தன்மை கொண்டது. நீர் என்னும் பொருள் தன்மைக்குள் உயிர்ப்பொருள் இருக்கிறது. உயிர்ப்பொருளுக்குள் பிராணன் இருக்கிறது. பிராணன் என்பது உயிர்சக்தி, ஆற்றல். பஞ்சபூதத்தில் குறிப்பிட்ட ஒரு பிராண சக்தி, அதோடு இருக்கின்ற மற்ற பிராணன்களாகிய மண் பிராணன், ஆகாய பிராணன், நெருப்பு பிராணன், காற்று பிராணன் ஆகியவற்றோடு சேர்ந்து தான் Matter(மேட்டர் ) என்னும் பொருள் தன்மை உருவாகிறது.

இந்த உடம்பு ஸ்தூலமானது. இந்த ஸ்தூல உடம்பு பஞ்ச பூதத்தால் ஆக்கப்பட்டது. அதில் நீர் என்ற பூதத்தில் உள்ள பிராண சக்தியால் இந்த உடம்பு ஆக்கப்பட்டு உள்ளது. உடம்பு அழியக்கூடிய ஒரு பொருள் ஆனால் இதற்குள் அழியாத ஒரு பொருள் இருக்கிறது. அந்த பொருள் என்றைக்கும் அழியாது. அந்த பொருளுக்குள் தான் எல்லாமே பதிவு ஆகி இருக்கிறது. அது உயிர் மூலத்தில் கலந்திருக்கும். இந்த நீருக்குள் உள்ள பிராணனும் அந்த உயிர் மூலமும் ஒரு தொடர்பில் இருக்கிறது.

இந்த பிறவியில் எனக்கு இருக்க கூடிய எண்ணங்கள் என்னுடைய சொல் செயல் என்னுடைய உணர்வுகள் எல்லாமே நீர் என்னும் இந்த பொருள் தன்மையில்(Matter) போய் பதிவு ஆகிறது. இது நீருக்குள் உள்ள பிராண சக்தி உயிர் மூலம் ஆகியவற்றில் போய் பதிகிறது. உயிர் பிராண சக்தியும் நீர் மூலமும் ஒரு தொடர்பில் இருக்கும். இது எல்லாவற்றுடன் தொடர்பில் இருக்கிறது. இப்போது 3000 வருடத்திற்கு முன் வாழ்ந்த ஞானியின் பேச்சை பதிவு செய்து, அதை மீட்டு (Recovery) கொண்டுவர ஆராய்ச்சியாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். இயேசு பேசியவை அவர் நினைத்தவை எல்லாம் இப்போது பதிவு செய்ய தொழில்நுட்பத்தால் முயன்று வருகிறார்கள். ஆனால் அவை எல்லாம் உண்மையில் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

இதை விஞ்ஞானம் இன்று தான் கண்டுபிடித்திருக்கிறது ஆனால் நமது சித்தர்கள் மெய்ஞானத்தில் இதை எல்லாம் பல ஆயிரம் வருடத்திற்கு முன்பே கண்டு சொல்லி விட்டார்கள். இப்போது 5000 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த சித்தர் நினைத்த நினைவுகளை நீங்களும் நானும் அடைய(Access) முடியும். அது எல்லாம் பிரபஞ்சத்தில் இப்போதும் இருக்கிறது. அதுதான் நமக்கு ஞானமாக வந்துகொண்டுள்ளது.

இதை எல்லாமே நாம் பரிணமித்து(Evolve) போய்க்கொண்டு இருக்கிறோம். அதாவது ஒரு செல் உயிரியாக இருந்து மிருகமாக இருந்து இப்போது மனிதனாக இருக்கிறோம் என்றால் அப்போது இருந்த ஞானம் பரிமாற்றம் (Transfer) அடைந்து அப்படியே வந்து கொண்டு இருக்கிறது. அது ஒரு ஊடகம்(Media) வழியாக வந்து கொண்டு உள்ளது. நீருக்குள் உள்ள உயிர் மூலத்துடனும் அதற்கு தொடர்பு இருக்கிறது. அது மட்டும் அல்ல. அதை தாண்டிய நிலையிலேயும் அந்த பதிவுகள் இருக்கிறது. அந்த பதிவுகள் ஒரு ஆழ்ந்த அலைக்கற்றை(Deep Core)ஆக இருக்கிறது. அந்த அதிர்வெண்ணில்(Frequency) இருந்து நமக்கு அது வந்து கொண்டு இருக்கிறது.

இந்த பதிவுகளை எல்லாம் பிரபஞ்சத்தை விட்டு என்றைக்கும் அழிக்க முடியாது. யாராலும் அழிக்க முடியாது. இன்று உங்கள் மனதில் வந்த ஒரு எண்ணம் அடுத்த 10 கோடி வருடம் அல்ல அடுத்த 1000 கோடி வருடத்திற்கு பிறகும் அதனுடைய அதிர்வுகள் அப்படியே இருக்கும் அந்த பதிவுகள் இருக்கும். அது உங்களுக்கு, உங்களுடைய கர்ம வினையை திருப்பி கொடுத்து கொண்டே(Settlement) இருக்கும். நீங்கள் ஏதோ நினைத்து கொண்டு நமது போக்கில் அப்படியே போய் விடலாம் என்று நினைக்காதீர்கள். அது உள்ளே இருந்து பதிவு ஆகி அதனுடைய மறுபாதியை முடித்து விட்டுத்தான் போகும். அதைத்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்(Albert Einstein) ஒவ்வொரு செயலுக்கும் சமமான அதே அளவு எதிர்மறை செயல் நடந்தே தீரும் என்று அறிவியல் பூர்வமாக சொன்னார். எனவே அனைத்தும் பதிவாகி எல்லாமே இங்கு உள்ளது.