ஒரு வீட்டில் ஒருவர் இறந்திருக்கிறார் என்றால் அந்த வீட்டில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று சொல்வார்கள். ஏன் இப்படி சொல்கிறார்கள்? நீர் என்பவர் உயிர் பொருள் , ஜடப்பொருள் அல்ல. நீர் நம்முடைய உணர்வுகள் , நாம் பேசும் , வார்த்தைகள் , இதை எல்லாமே அவர் பதிவு செய்கிறார். ஒவ்வொரு கணமும் , அதை பதிவு செய்கிறார். அதற்கு பதிலும் அளிக்கிறார் நாம் சந்தோசமாக இருந்து நன்றி உணர்வுடன் இருக்கும் போது அந்த நீரும் சந்தோசமாக இருக்கிறார் நாம் கோபமாகவோ துக்கமாகவோ படபடப்பாகவோ இருக்கும்போது அதையும் பதிவு செய்து அதற்கும் பதிலளிக்கிறார்.
இறந்தவர் வீட்டில் எல்லாருமே இறந்தவரை பார்த்து மிகவும் சோகமாக இருப்பார்கள். எல்லாருமே அழுது கொண்டு இருப்பார்கள். நாமும் அந்த வீட்டிற்கு சென்று சிரிக்க முடியாது நாமும் சோகமாகி விடுவோம் அதை போல் அங்கு இருக்கும் நீர் மிகப் பெரிய உயிர் பொருள் அவரும் மிகவும் சோகமாக இருப்பார் அவருக்குள் இருக்கும் அதிர்வுகள் எல்லாம் மாறி மிகுந்த சோகத்தில் இருப்பார். நாம் அங்கு சென்று அவர்களுக்கு நல்வார்த்தை சொல்லி சோகத்திலிருந்து அவர்களை காப்பாற்ற வேண்டும். நாம் அங்கு சென்றாலே நமக்காக இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு மனதைரியம் வரும்.
இப்போது நாம் அங்கு சென்று இந்த சோகத்தை எல்லாம் பதிவு செய்து மிகவும் சோகமாக இருக்கும் உயிர் பொருள் நீரை எடுத்து நாம் குடித்தால் நாமும் சோகமாகி விடுவோம் காப்பாற்ற சென்ற இடத்தில் நாமும் சோகமாகி விடுவோம். காப்பாற்ற சென்ற இடத்தில் நாம் மிகவும் சோகமாகி விடக் கூடாது. அதற்காக தான் அந்த நீரை குடிக்க வேண்டாம் என்று சொல்வார்கள்.
நீருக்கு உயிர் இருப்பதை அறிவியல் பூர்வமாக இப்போது நிரூபித்திருக்கிறார்கள. ஆனால் சித்தர்கள் அதை, அதன் அதிர்வுகளை வைத்து என்றோ கண்டுபிடித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல நமது வீட்டில் இருக்கும் நபர்களுக்குள் ஒரு மனக்கசப்பு ஏற்பட்டு சண்டை நடந்திருக்கிறது யாருமே முகத்தை கூட பார்த்து கொள்ளாமல் பேசிக்கொள்ளாமல் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் நமது வீட்டிற்கு ஒருவர் வருகிறார் அல்லது அதுபோல் சண்டை நடந்த வீட்டிற்கு நாம் செல்கிறோம் எனில் அங்கு இருக்கும் நீரை குடித்தால் அது உணவு விஷமாக(Food Poison) மாறும்.
நீர் எவ்வளவு பெரிய உயிர் பொருள் என்று பலருக்கு தெரிவது இல்லை. உதாரணத்திற்கு நம் வீட்டில் குழந்தை ஏதோ ஒரு தப்பு செய்து விட்டது. குழந்தை தப்பு செய்தது என்ற கோபத்தில் அதை கடுமையாக திட்டினால் , குழந்தை உடம்பிலும் 70% நீர் இருக்கிறது, அந்த உடம்பில் உள்ள நீர் துளிகளின் மூலக்கூறு அமைப்பு எல்லாம் உடைந்து சிதறிப்போய் அந்த குழந்தை கூனி குறுகிப்போய் விடும். ஒன்றுமில்லாமல் ஆகி விடும். இது எவ்வளவு பெரிய பாதிப்பு என்று பாருங்கள். எவ்வளவு பெரிய ஆபத்தில் நாம் இருக்கிறோம் என்று பாருங்கள். அதனால் தான் அந்த காலத்தில் இறந்தவர்கள் வீட்டில் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நீர் உயிர் பொருள் அதன் தன்மை அப்படி இருக்கும் என்று புரிந்ததனால் தான் அப்படி சொன்னார்கள்.